அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில் அதனை இயக்குனர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுத்துள்ளனர்.
மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு திரைப்பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. சில தினங்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி வெளிநாட்டில் வைத்து நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். இதற்கு உடனடியாக விளக்கம் அளித்த நிவின் பாலி, அந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு, அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் குற்றச்சாட்டை இயக்குனர்களான வினித் சீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுத்துள்ளனர். அந்த பெண் குற்றம் சாட்டப்பட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டிச., 14 முதல் 15ம் தேதி காலை வரை கொச்சியில் வினித் சீனிவாசனின் படப்பிடிப்பில் இருந்தார் என்றும் பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.