விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? |
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கின்றார். மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படத்தை உருவாகியுள்ளனர். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்று தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
இதனால் இந்த படத்தின் பிஸ்னஸ் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிதின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசத் மூவிஸ் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.