ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
2022ம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான 70வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அந்த ஆண்டில் தமிழில் குறிப்பிடும்படியான விமர்சனத்தைப் பெற்ற படங்கள் என, “விக்ரம், கார்கி, திருச்சிற்றம்பலம், வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் 1, லவ் டுடே” மற்றும் ஓடிடியில் வெளிவந்த 'மஹான், சாணி காயிதம்' ஆகிய படங்களைச் சொல்லலாம்.
தியேட்டர்களில் ஓடினாலும், ஓடாவிட்டாலும், ஓடிடி தளங்களில் வரவேற்பைப் பெற்றாலும் பெறாவிட்டாலும் சில படங்கள் ஏதோ ஒரு விதத்தில் தரமான படங்களாக இருக்கும். அப்படியான சில படங்கள்தான் மேலே குறிப்பிட்ட படங்கள்.
அவற்றில் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதை நித்யா மேனன் பெறுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியமானதாக இருந்தாலும் பொருத்தமான விருது என்று மனதாராப் பாராட்டலாம்.
அப்படத்தில் தனுஷ் வீட்டின் குடியிருப்பிலேயே நித்யாவின் வீடும் இருக்கும். இருவரும் சிறு வயதிலிருந்தே நட்பாகப் பழகி வருவார்கள். அம்மா இல்லாத ஒரு அரவணைப்பு, பாசம், எண்ணங்களைப் பகிர்வது என அனைத்தையும் நித்யாவிடம் பகிர்வார் தனுஷ். சொல்லப் போனால், அவர் காதலிக்கும் பெண்களைப் பற்றிக் கூடச் சொல்வார். தன் மனதில் தனுஷ் மீது காதல் இருந்தாலும் அதை அவரிடம் சொல்லாமல் மறைத்து தனுஷின் காதலுக்காக உதவி செய்வார் நித்யா மேனன். அப்படி ஒரு தோழி நமக்குக் கிடைக்க மாட்டாரா என படம் பார்த்தவர்களையும் ஏங்க வைத்தது நித்யாவின் நடிப்பு. அந்த அளவிற்கு யதார்த்தமாய், ஷோபனா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்தாலும் தமிழில் அவ்வப்போது மட்டுமே நடிக்க வருவார். மலையாளத்திலிருந்து வந்த நடிகையாக இருந்தாலும் ஒரு தமிழ்ப் படம் தான் அவருக்கு முதல் முறையாக தேசிய விருதைப் பெற்றுத் தந்துள்ளது.
தனுஷ் அடுத்த இயக்கி நடிக்க உள்ள படத்தில் நித்யா மேனன் தான் கதாநாயகி என்பது கூடுதல் தகவல்.