அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று உலகளவில் வெளியாகி உள்ள நிலையில், கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தங்கலான் படம் நேற்று முதல் நாளில் ரூ.26.44 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இது குறித்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நடிகர் விக்ரம் ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், புரிந்து கொள்ள முடியாத இந்த அன்புக்கு நன்றிகள். இதைவிட சிறப்பாக வேறு எதையும் கேட்க முடியாது. கோடி நன்றிகள் என்று தெரிவித்திருக்கிறார்.