விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் | எக்கோ பட இயக்குனருக்கு இறால் பிரியாணி விருந்தளித்த பிரபாஸ் | அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன மோகன்லால் மகள் | கணவர் டைரக்ஷனில் சல்மான் கானுக்கு ஜோடியாகும் சமந்தா |

முன்னணி கன்னட நடிகராகன தர்ஷன் தனது காதலி பவித்ரா கவுடாவை கடுமையாக விமர்சித்ததற்காக தனது ரசிகர் ரேணுகாசாமி என்பவரை கூலிப்படையை ஏவி படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். இந்த வழக்கு நல்ல ஸ்டிராங்காக இருப்பதாகவும், அவர் தப்பிக்க வழியே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தர்ஷன் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக கன்னட நடிகர் சங்கத்தினர் நேற்று சாமராஜ்நகரில் உள்ள சங்க கட்டிடத்தில் சிறப்பு ஹோமம் நடத்தினர். இதில் நடிகர்கள் ஜக்கேஷ், தொட்டண்ணா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகை ஜெயமாலா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து கொலை வழக்கில் சிக்கிய நடிகருக்காக பூஜை செய்யலாமா என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "இந்த பூஜை கன்னட திரையுலகம் வளர்ச்சி வேண்டி மேற்கொள்ளப்பட்டது. அண்மைக்காலமாக திரையுலகிற்கு சில சிக்கல்கள் வந்துள்ளன. அதிலிருந்து விடுபட்டு மீண்டும் உச்சநிலையை அடைய வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். அதற்காகவே சிறப்பு ஹோமம் நடத்தினோம். தர்ஷனுக்காக மட்டுமே நடத்தினோம் என கூறுவதை ஏற்க முடியாது" என்று விளக்கம் அளித்துள்ளார்.




