ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
திருமணம் என்கிற தொடரில் இணைந்து நடித்த சித்து - ஸ்ரேயா இருவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் தனித்தனியே சில சீரியல்களில் நடித்து வந்த இருவரும் தற்போது மீண்டும் திரையில் ஜோடியாக கம்பேக் கொடுத்துள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரான வள்ளியின் வேலன் என்கிற தொடரில் ஹீரோவாக சித்துவும், ஹீரோயினாக ஸ்ரேயாவும் நடிக்கின்றனர். திருமணத்திற்கு முன்னதாகவே இவர்களது கெமிஸ்ட்ரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் தற்போது ரியலிலும் ஜோடி ரீலிலும் ஜோடி என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியாகியுள்ள வள்ளியின் வேலன் தொடரின் புரோமோவுக்கும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து வைரலாகி வருகிறது.