லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பாரீஸில் நடந்தும் வரும் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த விளையாட்டில் 50 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய இந்தியாவின் வினேஷ் போகத் பைனலுக்கு முன்னேறிய நிலையில் அவர் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது பதக்க வாய்ப்பு பறிபோனது. இதையடுத்து அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா வெளியிட்ட பதிவில், ‛‛சில நேரங்களில் உறுதியான நபர்களும் கடினமான சூழலை எதிர்கொள்கின்றனர். நீங்கள் தனி ஆள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் வினேஷ் போகத். உங்களுக்கு மேலே ஒரு சக்கதி பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு கடினமான சூழலிலும் உங்களின் அசாத்திய திறமை போற்றத்தக்கது. உங்கள் ஏற்ற, இறக்கங்கள் எல்லாவற்றிலும் நாங்கள் எப்போதும் உடன் உறுதுணையாக இருப்போம்'' என தெரிவித்துள்ளார்.