'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். செப்., 5ல் படம் ரிலீஸாவதால் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கியுள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். இதனால் இன்னும் ஒரு படம் மட்டுமே நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இவரின் இந்த படத்தை தற்காலிகமாக விஜய் 69 என குறிப்பிட்டுள்ளனர். இதனை வினோத் இயக்குகிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. இப்போது இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாளத்தில் பிரேமலு என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை சமீபத்தில் முடிவடைந்தது என்கிறார்கள்.