சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கேரளாவில் பெய்த பெரும் மழையால் வயநாடு மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலர் மண்ணோடு மண்ணாக புதைந்ததால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கேரளா மாநிலத்திற்கு உதவ பலரும் முன் வந்துள்ளனர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விக்ரம் தனது பங்கிற்கு முதல் ஆளாய் ரூ.20 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதை வழங்கி உள்ளார்.
கடந்த 2018-லும் கேரளாவில் ஏற்பட்ட மழை பாதிப்பின் போது விக்ரம் ரூ.35 லட்சம் நிதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமை தொடர்ந்து மேலும் பல தமிழ் திரைப் பிரபலங்களும் நிதி உதவி அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.