பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சாவர்க்கர் மதிப்பு மிகுந்த மனிதர். தனது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். அந்தக் காலத்தில் பெண்கள் படிக்கமாட்டார்கள் என்பதால் அவரை பலரும் கிண்டல் செய்தனர். சாவர்க்கர் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று படிக்க வைக்கச் சென்றார்'' என்று பேசி இருந்தார்.
ஆனால் அவர் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளார். அது சாவர்க்கர் அல்ல, ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே என பலரும் சுட்டிக்காட்டி சுதாவை விமர்சித்தனர். அதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தான் தவறான கருத்து கூறியதாக ஒரு பதிவு போட்டு வருத்தம் தெரிவித்துள்ளார் சுதா.
அந்த பதிவில், ‛‛என் தவறுக்கு வருந்துகிறேன். எனது 17வது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.