சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு 'ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்' என்ற பெயரில் ஹிந்தியில் படமாக உருவாகிறது. ரன்தீப் ஹூடா இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தை ரன்தீப் ஹூடா பிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது.
“அகிம்சை மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று நாம் அனைவரும் படித்திருக்கிறோம், ஆனால் இது அந்தக் கதை அல்ல” என்ற பின்னணி குரலோடு தொடங்கும் டிரைலரில் அந்தமான் சிறையில் வீர் சாவர்க்கர் துன்புறுத்தப்படும் காட்சிகள் இடம்பெறுகிறது. "வெள்ளையரை முழுதாக விழுங்கக்கூடிய மக்களை நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன்" என்கிறார். இந்த கருத்துகளும், காட்சிகளும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒருநாளில் இந்த டிரைலர் கிட்டத்தட்ட 80 லட்சம் பார்வைகளை நெருங்கி உள்ளது.