பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் வீர சாவர்கரும் குறிப்பிடத்தக்கவர். அவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக தயாராகிறது. இதில் வீர சாவர்கராக ரன்தீப் ஹூடா நடிக்கிறார். அவர் வீரசாவர்கர் வேடத்தில் இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அச்சு அசலாக அவர் வீர சாவர்கர் போன்றே இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
இது குறித்து ரன்தீப் கூறுகையில், இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் மிக சிறந்த வீரர் ஒருவருக்கு இது ஒரு சல்யூட். ஒரு உண்மையான புரட்சியாளரின் சவாலை என்னால் எதிர்கொள்ள முடியும் மற்றும் அவரது உண்மையான கதையைச் சொல்ல முடியும் என்று நம்புகிறேன். இவ்வளவு காலமாக மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இந்த படத்தில் சொல்லப்படுகிறது என்று எழுதியுள்ளார்.
இயக்குனர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் கூறியிருப்பதாவது: சாவர்க்கரைப் பற்றி மக்கள் மனதில் வெவ்வேறு பதிப்புகள் இருக்கலாம், ஆனால் ஒரு திரைப்படத் இயக்குனராக, சாவர்க்கரின் எண்ணத்தை நான் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். எனவே, படத்தில் வரும் சாவர்க்கரின் கதாபாத்திரத்திற்கும் அவரின் நிஜ வாழ்க்கைக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அவரை எந்த இந்தியனும் என்றும் மறக்க முடியாது, மறக்க கூடாது என்பதை உறுதி செய்வோம். என்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது.