'மகாராஜ்' படத்தில் சர்ச்சை காட்சியில் நடித்தது ஏன்: ஷாலினி பாண்டே விளக்கம் | தனுஷ் ஒரு மிகச் சிறந்த மனிதர்! - சொல்கிறார் ரோபோ சங்கர் | 45வது படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா! | டிச.,18ல் ஓடிடியில் வெளியாகும் ‛கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' | இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் தாயார் மரணம்! | விடாமுயற்சி டப்பிங் பணிகளை தொடங்கிய அஜித்குமார்! | ரஜினி பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்! | கூலி படத்தில் இணைந்த ரெபா மோனிகா ஜான், சந்தீப் கிஷன் | பாலிவுட்டில் அறிமுகமாகும் பஹத் பாசில் | 4கே-வில் ரீ-ரிலீஸ் ஆகும் வேலையில்லா பட்டதாரி தெலுங்கு பதிப்பு |
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், அதையடுத்து சூர்யா நடிக்கும் 44-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளான இன்று(ஜூலை 23) அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் சூர்யா 44 படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் கேஸ்டர் புடைசூழ வாயில் சிகரெட்டை புகைத்தபடி வேகமாக வரும் சூர்யா, துப்பாக்கியை எடுத்து சுடுவது போல் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. ஆக்ஷன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகும் என்றும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.