கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
இந்திய சினிமாவை குறிப்பாக தென்னிந்திய சினிமாவை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. சினிமாவின் சிகரமான ஆஸ்கரையும் தொட்டார். 2001ம் ஆண்டு 'ஸ்டூடண்ட் நம்பர்-1' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கினார். என்றாலும் 2012ம் ஆண்டு இயக்கிய 'நான் ஈ' படம் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியை பெற்றது. சாதாரண நடிகராக இருந்த நானியும், நடிகையாக இருந்த சமந்தாவும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்கள்.
'பாகுபலி' இரண்டு பாகங்கள், ஆர்ஆர்ஆர் படங்களின் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். 2 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரதத்தை 4 பாகங்களாக எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்கு இடையில் மகேஷ் பாபு நடிக்கும் சூப்பர் ஹீரோ படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இந்த அசுர வளர்ச்சி, அவரின் கடின உழைப்பு, அவரது குடும்பம் இவற்றை அடிப்படையாக வைத்து 'மார்டன் மாஸ்டர்ஸ்' என்ற பெயரில் ஆவணப் படம் ஒன்று தயாராகி உள்ளது. இதனை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதனை ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.