ஆளுமை உரிமை வழக்கு தொடர்ந்துள்ள கமல்ஹாசன் | ஹிந்தியில் ஓப்பனிங்கிலேயே சரிவடைந்த பிரபாஸின் 'தி ராஜா சாப்' வசூல்! | பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் பிச்சைக்காரனாக விஜய் சேதுபதி! | 'பராசக்தி, தி ராஜா சாப்' படங்களின் வசூல் விவரம்! | 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி- 3 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்! | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'டாக்சிக் - ராயா' வீடியோ | சமமான சம்பளத்திற்காக குரல் கொடுக்கும் சுதா கொங்கரா! | வேதநாங் ரெய்னா, குஷி கபூரின் 2 வருட காதல் முறிந்ததா? | ரேட்டிங்கிற்குத் தடை வாங்கிய சிரஞ்சீவி படத் தயாரிப்பாளர் | தமன்னா கீ ரோலில் நடித்துள்ள 'ஓ ரோமியோ' ஹிந்தி படம் பிப்.,13ல் ரிலீஸ்! |
ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தை இயக்கியவர் ராம். அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் இப்போது இயக்கியுள்ள படம் தங்க மீன்கள். இப்படத்தை இயக்குனர் கெளதம்மேனன் தயாரித்துள்ளார். அப்பா- மகளுக்கிடையே நிகழும் பாச உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தின் கதையை கேட்டபோது, டைரக்டர் ராமையே கதாநாயகனாகவும் நடிக்குமாறு கேட்டுக்கொண்டாராம் கெளதம்மேனன்.
அதன்காரணமாக சில நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு ஒரு பாசமிகு அப்பாவாக இப்படத்தில் நடித்தாராம் ராம். அதேபோல், அவரது மகளாக சாதனா என்ற எட்டு வயதும் சிறுமியும் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டனர். அப்போது அதில் இடம்பெற்ற சில காட்சிகள் மனதை டச் பண்ணுவதாக இருந்தது. அதையடுத்து பேசியவர்கள் இப்படத்துக்கு பெரிய அளவிலான விருதுகள் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், இப்படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்துள்ளாராம் ரோகிணி. படத்தின் நாயகனாக நடித்திருப்பதும் டைரக்டர் ராம்தான். அவருக்கும், ரோகிணிக்கும் பெரிய அளவில் ஒன்றும் வயது வித்தியாசம் இருக்காது. என்றபோதும், அந்த கதாபாத்திரம் ரோகிணிக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். அதனால் முதிர்ச்சியான கெட்டப் என்றாலும் விரும்பி நடித்துள்ளாராம்.




