ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி கடந்த 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி 2009ம் ஆண்டு ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறி கைதி நம்பர் 150 என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் சிரஞ்சீவி. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவருக்கு மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். தனது தம்பியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கணிசமான வெற்றி கிடைத்து அவர் துணை முதல்வர் ஆகி இருக்கிறார். அடுத்த படியாக தம்பியின் ஜனசேனா கட்சியில் சிரஞ்சீவி முக்கிய பொறுப்புக்கு வரப்போவதாக ஆந்திராவில் செய்தி பரவி வருகிறது.