
இந்த வாரம்… டல் ஆன வாரம்…
ஷாஜி சலீம் இயக்கத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா ஆகியோர் நடிக்கும் "லாந்தர்" படம், பாஸ்கர் சக்தி இயக்கத்தில், குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா மற்றும் பலர் நடித்துள்ள "ரயில்" படம், ராகுல் கபாலி இயக்கத்தில், ஜேடி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடிக்கும் "பயமறியா பிரம்மை" ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள்.
இவை தவிர கமல்ஹாசன் நடித்த "குணா", விஜய் நடித்துள்ள "போக்கிரி, துப்பாக்கி" ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன.
அடுத்த வாரம் ஜூன் 27ம் தேதி "கல்கி 2898 ஏடி" படம் வெளியாக உள்ளதால் இந்த வாரமும், அடுத்த வாரமும் தமிழ்ப் படங்களின் ரிலீஸ் "டல்" ஆகவே இருக்கும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!