நடிகர் அர்ஜூனின் மூத்த மகன் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த பத்தாம் தேதி சென்னையில் அர்ஜூன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள அர்ஜூன் ஒரு பதிவும் போட்டு உள்ளார். அதில், என்னுடைய மகள் ஐஸ்வர்யா தனது காதலரான உமாபதியை திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மேலும், உன்னுடைய வாழ்க்கையில் நீ புது அத்தியாயத்திற்கு சென்றிருப்பதை பார்த்து பெருமையாக உள்ளது. உங்கள் இருவர் மீதும் அதிகப்படியான அன்பு வைத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் அர்ஜூன்.