தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தற்போது திரைக்கு வந்திருக்கும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவான விமர்சனங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என்று தான் வாழ்த்துவதாக தெரிவித்திருக்கிறார்.
அதையடுத்து இன்னொரு பதிவில், இந்த மாதம் விஜய்யின் ஸ்பெஷல் மாதம் என்பதால் கோட் படத்தின் அப்டேட்களை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் விஜய்யின் பிறந்தநாளில் கோட் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ள நிலையில் அதையடுத்து டீசர், டிரைலர் ரிலீஸ் செய்திகளும் வெளியாகும் என்று தெரிகிறது.