குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயல்பாகவே அமைதியும், கூச்ச சுபாவமும் உடையவர். மெதுவாகத்தான் பேசுவார். அதிலும் தற்போது அவரது மகள் மறைவுக்கு பிறகு இன்னும் அமைதியாகி விட்டார். அவரது பேச்சில் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
சமீபகாலங்களில் அவர் காலில் செருப்பு அணிவதை தவிர்த்து வருகிறார். ஏதாவது வேண்டுதலாக இருக்கலாம் என்று எல்லோரும் கருதி வந்தார்கள். ஆனால் இனி செருப்பு அணிய மாட்டேன் என்று அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஐதராபாத்தில நடந்த அவரின் 'மழை பிடிக்காத மனிதன் ' பட புரமோஷன் நிகழ்வில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது “நான் சில நாட்களுக்கு முன் செருப்பு அணியாமல் சுற்றித்திரிந்தேன். அந்த அனுபவம் எனக்கு நன்றாக இருந்தது போல் தோன்றியது. செருப்பு அணியாதபோது மனதுக்கு அமைதி கிடைத்தது. ஆரோக்கியத்துக்கும் அது நல்லதுதான். அது மட்டுமின்றி நமக்குள் தன்னம்பிக்கையை கூட இது வளர்க்கும். நான் எப்போது செருப்பில்லாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அந்த சமயத்தில் இருந்து எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகவில்லை. வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியாமல் இருக்க விரும்புகிறேன். இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.