2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் புதிதாக நேற்று முதல் ஒளிபரப்பாகி உள்ளது 'உப்பு புளி காரம்' தொடர். இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, பரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.
“உப்பு புளி காரம் ஒரு வயதான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட கதையாகும். வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும். 'கனா காணும் காலங்கள்' மற்றும் 'ஹார்ட் பீட்' சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த 'உப்பு புளி காரம்' சீரிஸானது, காதல், காமெடி, பேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கும்” என்கிறார் இயக்குனர் ரமேஷ் பாரதி.




