பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
இயக்குனர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் இன்று(மே 27) காலை காலமானார்.
கடந்த 1996ல் ராஜ் கிரண், வனிதா நடித்த மாணிக்கம் படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சூர்யபிரகாஷ். தொடர்ந்து சரத்குமார் நடித்த மாயி, திவான் ஆகிய படங்களையும், ஜீவன் நடித்த அதிபர் படத்தையும் இயக்கினார். கடைசியாக வருஷநாடு என்ற படத்தை இயக்கினார். ஆனால் இன்னும் அந்தப்படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று(மே 27) காலை இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சரத்குமார் இரங்கல்
நடிகர் சரத்குமார் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‛‛எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ், இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.