பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்த படம் 'பார்க்கிங்'. இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்திருந்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சாம் சி.எஸ் இசை அமைத்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
ஒரே வளாகத்தில் குடியிருக்கும் இரண்டு குடும்பத் தலைவர்களுக்கு இடையே கார் நிறுத்துவதில் ஏற்படும் ஈகோ எப்படியெல்லாம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதுதான் படத்தின் கதை. தற்போது இந்த படத்தின் திரைக்கதை ஆஸ்கர் விருது அமைப்பின் நூலகத்தில் வைக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் சினிமா கற்கும் உலக திறமையாளர்கள் இந்த திரைக்கதையை படிக்கும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இது தொடர்பாக ஆஸ்கர் அமைப்பு தயாரிப்பாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில் “மிகப்பெரிய படைப்புகளுக்கு மத்தியில் எனது படைப்பும் இடம்பெறுவது, பெருமையாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ''பார்க்கிங் படம் உங்கள் இதயங்களிலிருந்து ஆஸ்கர் நூலகம் வரை சென்றிருக்கிறது. ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானே தேடி போகும். இந்த நம்பமுடியாத பயணத்திற்கும் என் பார்க்கிங் அணிக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.