'இந்தியன் 3' படத்திற்கு கெடுவைத்த ஷங்கர்! | குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது! - பார்த்திபன் | ஹர்பஜன் சிங்கின் இரண்டாவது தமிழ் படம் குறித்து தகவல் இதோ! | 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'ஆரண்ய காண்டம்' | உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு' | பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி |

கோட் படத்தில் நடித்து வரும் விஜய் விரைவில் தனது தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கும் திட்டமிட்டு வருகிறார். அதோடு, கடந்தாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பரிசளித்து உற்சாகப்படுத்தினார் விஜய்.
இந்நிலையில் இந்த ஆண்டும் அந்த கல்வி விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10, 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்து மாணவ மாணவிகளை தேர்வு செய்து வருகிறார்கள். அதோடு இந்த ஆண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மட்டுமின்றி, ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு உயர் கல்விக்கு உதவி செய்யும் திட்டத்தையும் அறிவிக்கும் விஜய், திருநங்கை மாணவிகளுக்கும் இந்த முறை பரிசு வழங்க திட்டமிட்டிருக்கிறார்.




