''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' நாவலை மையமாக வைத்து இயக்குனர்கள் பாலா படம் இயக்கப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல ரத்தினகுமார் எழுதிய கதையில் அதே பெயரில் படம் இயக்கப் போவதாக பாரதிராஜாவும் அறிவித்தார். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தனித் தனியே பத்திரிகையாளர் சந்திப்புகளையும் நடத்தினார்கள்.
அந்த அளவுக்குப் போட்டி போட்டவர்கள் தற்போது வரையில் அந்தப் படத்தை இயக்கவேயில்லை. இதனிடையே, சசிகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், சத்யராஜ், ராணா டகுபட்டி, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடிக்க 'குற்றப்பரம்பரை' கதையை வெப் தொடராக இயக்க வேலைகள் ஆரம்பமாகின.
கடந்த வருடமே இத்தொடரின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை படப்பிடிப்பு ஆரம்பமாமகவில்லை. இத்தொடரை ஹாட்ஸ்டார் நிறவனம்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சமீப காலங்களில் ஓடிடி தொடர்களுக்கு பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இத்தொடரை நிறுத்திவிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதும் இதற்குக் காரணம் என்கிறார்கள்.
திரைப்படமாக இரண்டு முறை, வெப் தொடராக ஒரு முறை என மொத்தம் மூன்று முறை 'குற்றப்பரம்பரை' டிராப் ஆகியுள்ளது. இனிமேலும், இதை யாராவது படமாகவே, தொடராகவோ தயாரிக்க முன் வருவார்களா என்பது சந்தேகமே.