சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

தங்கலான் படத்தை அடுத்து தற்போது அருண்குமார் இயக்கும் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டைட்டில் டீசர் விக்ரமின் பிறந்தநாளில் வெளியானது. அப்போது வெளியான போஸ்டரில், இரண்டு கையிலும் இரண்டு அரிவாள்களை வைத்தபடி ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் விக்ரம். இந்த போஸ்டருக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், சமீபகாலமாக இளைஞர்கள் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நேரத்தில் விக்ரம் நடித்திருக்கும் வீர தீர சூரன் படத்தின் போஸ்டரில் இரண்டு கையிலும் இரண்டு அரிவாள்களை வைத்துக் கொண்டு நிற்கிறார். இது போன்ற போஸ்டர்கள் இன்றைய இளைய தலைமுறையை வெகுவாக பாதிக்கும். அவர்கள் மனதில் வன்முறை எண்ணங்களை தூண்டிவிடும். எனவே இப்படி விக்ரம் அரிவாளுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.