பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இறுதி பிரச்சாரம் நேற்று நடந்தது. வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூரலிகான் குடியாத்தம் பகுதியில் உள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது நெஞ்சு வலிப்பதாக அவர் சொன்னதை எடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மன்சூரலிகான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பிய போது ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி என்னை பழ ஜூஸ் குடிக்க சொன்னார்கள். அதன் பிறகு மோர் கொடுத்தார்கள். அவற்றை குடித்த உடனே மயக்கம் வந்தது. அடி நெஞ்சு தாங்க முடியாத அளவுக்கு வலித்தது. அதை அடுத்து என்னை பாலாறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்தார்கள். ஆனாலும் வலி அதிகமாகவே இருந்தது. அதன் பிறகு தான் ஆம்புலன்சில் சென்னைக்கு கூட்டிட்டு வந்து ஐசியுவில் அட்மிட் செய்து சிகிச்சை கொடுத்த பிறகு இப்போது வலி குறைந்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் .
மன்சூரலிகானுக்கு நுரையீரல் வலி போக விஷ முறிவு ட்ரிப்ஸ் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகே வலி குறைந்ததாகவும், இன்று அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.