தி ராஜா சாப் : முதல் நாள் வசூல் ரூ.112 கோடி | தணிக்கையில் பிரச்னை... மாற்றம் வேண்டும் என்கிறார் கமல் | கருப்பான பெண்ணாக நடிக்கவும் கலரான பெண்ணையே தேர்வு செய்கிறார்கள்: பிரானா வருத்தம் | பிளாஷ்பேக் : ஒரேநாளில் மோதி வெற்றி பெற்ற 3 ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த டி.எஸ்.பாலய்யா | 'வா வாத்தியார்' படத்தை ஏலம் விட கோர்ட் உத்தரவு | தமிழில் வெளியாகும் சாரா அர்ஜுனின் தெலுங்கு படம் | நான்காவது முறையாக தனுஷ், ஆனந்த் எல் ராய் கூட்டணி | வெங்கடேஷ் என்னுடைய நவீன கால குரு : சிரஞ்சீவி புகழாரம் | இயக்குனர் கீத்து மோகன்தஸுக்கு 8 வருடம் காத்திருந்து மம்முட்டி பட இயக்குனர் பதிலடி |

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டா தளத்தில் பயணித்து வருகிறார். இவரின் கணக்கு திடீரென நீக்கப்பட்டது. சமீபத்தில் இவர் இசையமைப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‛கோட்' படத்தில் இருந்து ‛விசில் போடு' என்ற பாடல் வெளியானது. 38 மில்லியன் பார்வைகளை இந்தப்பாடல் கடந்தாலும் ரசிகர்களை கவரவில்லை என அனிருத் ரசிகர்களும், யுவன் ரசிகர்களும் சண்டையிட்டு வந்தனர். இதனால் தான் யுவன் இன்ஸ்டாதளம் நீக்கப்பட்டதாக செய்தி பரவியது. திடீரென யுவன் இன்ஸ்டா கணக்கு இல்லாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள யுவன், ‛‛இது சம்பந்தப்பட்ட தகவல்களை அனுப்பியவர்களுக்கு நன்றி. தொழில்நுட்ப பிரச்னையால் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. எனது இன்ஸ்டா கணக்கை மீட்க எனது குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விரைவில் நான் சந்திக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.