ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

சமீபத்தில் கோவையில் 'ரோமியோ' பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, “ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் பிடித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார். அவரின் இந்த கருத்து சர்ச்சை ஆனது. இந்த நிலையில் படத்தின் புரமோசனுக்காக மதுரை சென்ற விஜய் ஆண்டனி இதுகுறித்து விளக்கம் அளித்தார்.
அங்கு அவர் கூறியிருப்பதாவது: ஓட்டுக்குப் பணம் வாங்குவது சரி என்று சொல்லவில்லை. வறுமையில் இருப்பவர்களுக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று தான் சொன்னேன். நான் சாதாரணமாக பேசுவது சர்ச்சையாக்கப்படுகிறது. அந்த மாதிரியான எதிர்மறை சிந்தனைகள் எனக்கு கிடையாது.
உலக நாடுகள் முழுக்க போர் நடக்கிறது. ஆனால் இந்தியா அமைதியாக இருக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவை அமைதியாக வைத்துக் கொள்கிறார்கள். சுதந்திரத்திற்கு பின்பு போர் நடந்திருக்கிறதா? சிலர் தவறு செய்திருக்கலாம். அதனால் எந்த ஆட்சியையும் தவறு சொல்ல முடியாது. வருங்காலத்தில் அரசியலுக்கு வருவது தொடர்பான யோசனை இப்போதைக்கு இல்லை. எனது வேலையைப் பார்ப்பதற்கு நேரம் சரியாக இருக்கிறது. என்றார்.