கோடிகளில் சம்பளம்... ஆனாலும் மகிழ்ச்சி இல்லை : அனிருத் | பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்” | 2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! |

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை அருகே பாந்த்ராவில் உள்ள இவரது வீட்டின் அருகே 2 மர்ம நபர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கியால் 3 ரவுண்ட் சுட்டு தப்பியோடினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கிச்சூடு நடைபெறும் போது சல்மான் கான் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. சல்மான் கானுக்கு ‛ஒய் பிளஸ்' பாதுகாப்பு போடப்பட்டும் துப்பாக்கிச்சூடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.




