'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஆவேசம் திரைப்படம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக இன்று திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. கடந்த வருடம் மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி ஹிட் அடித்த ரோமாஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பஹத் பாசில் பெங்களூருவை சேர்ந்த ஒரு தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களின் நடித்து வரும் பஹத் பாசில் இந்த படத்தின் புரமோசனையும் கூட வித்தியாசமாகவே செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ள இந்த படத்தை வரவேற்கும் விதமாக நேற்று ஒரு வரவேற்பு டீசர் வெளியிடப்பட்டது. அதில் இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வரும் பஹத் பாசில் ஒரு அசத்தலான டான்ஸ் ஒன்றை ஆடிக்கொண்டே இந்த படத்தில் அவர் பேசிய டயலாக்கான 'எடா மோனே நாளே காணலாம்' என்கிற வசனத்தையும் கூறுகிறார். சாண்டி மாஸ்டர் இந்த நடனத்தை வடிவமைத்துள்ளாராம். இந்த டவல் டான்ஸ் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.