போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு |

கோட் படத்தில் நடித்து வரும் விஜய், இந்த இடத்திற்கு பிறகு தனது 69 வது படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தில் நடித்து முடித்ததும் தீவிர அரசியலில் இறங்குகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய், சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அது சீரடி சாய்பாபா கோவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது அந்த புகைப்படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், நடிகர் விஜய் தனது அம்மா ஷோபா சந்திரசேகருக்காக சென்னையில் உள்ள கொரட்டூரில் ஒரு சாய்பாபா கோவில் கட்டி கொடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அப்போது விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது என்று தெரியவந்துள்ளது.