எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை |
தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் ஐந்து படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டவர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் ஸ்ருதிஹாசன் உருவாக்கி வரும் இனிமேல் என்கிற இசை ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக ஒரு நடிகராகவும் மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஸ்ருதிஹாசனுடனான நெருக்கமான காட்சிகளில் இவர் நடித்திருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது லோகேஷ் கனகராஜுக்குள் இப்படி ஒரு நடிகனா என பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் வெளியான ஹிருதயம் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக லோகேஷ் கனகராஜை அணுகியவர் இயக்குனர் நடிகருமான வினீத் சீனிவாசன்.
மோகன்லால் மகன் பிரணவ் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில் அவரது நண்பராக நடிக்க வேண்டிய தமிழ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக லோகேஷ் கனகராஜிடம் சென்று பேசியதாகவும் ஆனால் அந்த நேரத்தில் லியோ படத்திற்காக வேலைகளில் லோகேஷ் பிஸியாக இருந்ததால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் கூறியுள்ளார் வினீத் சீனிவாசன். அதன் பின் அவருக்கு பதிலாக காலேஸ் ராம்நாத் என்பவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.