ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி |
ஹாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். பாடி பில்டராக இருந்து சினிமா நட்சத்திரமாக உயர்ந்தவர். 1970ல் வெளியான 'ஹெர்குலஸ் இன் நியூயார்க்' படம் மூலம் நடிகராக அறிமுமான இவர் பின்னர் 1984ல் வெளியான 'தி டெர்மினேட்டர்' மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். அதன் பிறகு வெளிவந்த இதன் 4 பாகங்களிலும் நடித்தார். பிரடியேட்டர், ராவ் டீல், ட்ரூ லைவ்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் 'எக்ஸ்பண்டபிள்' படத்தின் அனைத்து பாகங்களிலும் நடித்தார்.
அர்னால்டுக்கு இப்போது 76 வயதாகிறது. என்றாலும் இப்போதும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடித்த 'பூபர்' படம் வெளியானது. தற்போது 'குங் பியூரி 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு இதயப் பிரச்சினை காரணமாக பேஸ் மேக்கர் சிகிச்சை நடந்திருக்கிறது.
பேஸ்மேக்கருடன் இருக்கும் படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அர்னால்டு, “நன்றி, நான் உலகம் முழுவதிலுமிருந்து பல வகையான செய்திகளைப் பெற்றுள்ளேன், ஆனால் அதில் முக்கியமாக எனது பூபர் சீசன் 2 -ல் ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்துமா என்று பலர் கேட்டுள்ளனர். நிச்சயமாக இல்லை. ஏப்ரலில் படப்பிடிப்புக்கு செல்ல நான் தயாராக இருப்பேன்” என்று எழுதியுள்ளார்.
ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.