பிளாஷ்பேக் : சோலோ ஹீரோயினாக நடித்த வி.என்.ஜானகி | பிறந்தநாளில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | ஒரு படம் வருவதற்கு முன்பே பிஸியாகும் சாய் அபயங்கர் | ‛வீர தீர சூரன்' படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம் : மாலை முதல் படம் ரிலீஸ் | விட்டுக் கொடுத்த விக்ரம் : வெளியாகும் 'வீர தீர சூரன் 2' | எம்புரானை தெலுங்கில் ரீமேக் செய்ய முடியாது : மோகன்லால் ஓபன் டாக் | கார் விபத்தில் சிக்கி நடிகர் சோனு சூட் மனைவி காயம் | இசையமைப்பாளர் ஷான் ரகுமான் மீது பண மோசடி வழக்கு | டேவிட் வார்னர் பற்றி அலட்சியமாக பேசவில்லை : வருத்தம் தெரிவித்த நடிகர் ராஜேந்திர பிரசாத் | யாருப்பா அந்த வில்லன் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. சுருக்கமாக ‛தி கோட்' என அழைக்கிறார்கள். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய்யுடன் இணைந்து மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. தினமும் விஜய்யை சந்திக்க ரசிகர்கள் திரண்டனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக ‛தி கோட்' படக்குழு ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவிற்கு செல்கின்றனர். இந்த படப்பிடிப்பில் விஜய்யும் கலந்து கொள்கிறார். தேர்தல் முடிந்த பின்னர் இவர்கள் ரஷ்யா புறப்படுவார்கள் என தெரிகிறது.