இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

ஷங்கர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'ஜரகண்டி' பாடல் நேற்று ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
கடந்தாண்டு இப்பாடல் ஆன்லைனில் லீக் ஆனது. அதன்பின் தீபாவளிக்கு பாடலை வெளியிடுகிறோம் என அறிவித்தார்கள். ஆனால், வெளியிடாமல் தள்ளி வைத்தார்கள். நேற்றுதான் இப்பாடல் வெளியானது.
ஷங்கரின் வழக்கமான பிரம்மாண்டம் இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ளது. ஒரு ஊரில் உள்ள வீட்டுக்கே கலர் கலராக பெயின்ட் அடித்து வைத்திருக்கிறார். கிராபிக்ஸ் தொழில்நுட்பமும் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எண்ணற்ற டான்சர்கள் பாடலில் இடம் பெற்றுள்ளார்கள். இப்பாடல் மட்டுமே 15 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இயக்குனர் ஷங்கரின் வேண்டுகோளுக்கிணங்க பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார். இப்பாடலைப் பற்றி பலவிதமான கமெண்ட்டுகள் வந்தாலும் யு டியூப் டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்திலும் 42 லட்சம் பார்வைகளையும் இதுவரை கடந்துள்ளது.