'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்யா தேவராஜன். சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான இவர், அருவி தொடரின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். தற்போது இவரது நடிப்புக்கு பாசிட்டிவான கமெண்டுகள் கிடைத்து வரும் நிலையில் புதிய ப்ராஜெக்ட்டுகளிலும் கமிட்டாகி நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், 'புதிய ப்ராஜெக்ட்டுகளில் நடிக்க முடிவெடுத்துள்ளேன். நல்ல டீம் நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்' என மெயில் ஐடி ஒன்றையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து சின்னத்திரையில் சத்யா தேவராஜனின் மார்க்கெட் எகிறும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.