‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ |
தமிழ் சினிமா எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆரம்ப கட்டத்தில் தவித்து வருகிறது. இந்த வருடத்தின் மூன்றாவது வாரம் முடிய இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. ஆனாலும், இதுவரையில் லாபகரமான வெற்றி என எந்த ஒரு படத்தையும் சொல்ல முடியவில்லை.
நேற்று கூட ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'ரெபல்' படம் வெளிவந்தது. அப்படத்திற்கும் கூட ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு தரவில்லை. நேற்றுமுன்தினம் தான் இந்த ஆண்டிற்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகின. முதல் போட்டியே சென்னையில் நடந்தது. அதுவும் சென்னை அணிக்கும், பெங்களூரு அணிக்குமான போட்டி. அதனால், நேற்றுமுன்தினம் மாலையிலிருந்தே தமிழக கிரிக்கெட் ரசிகர்களை ஜுரம் பற்றிக் கொண்டது.
ஏற்கெனவே முழு ஆண்டுத் தேர்வுகளாலும் தியேட்டர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இப்போது பிரீமியர் லீக் போட்டியும், சில தினங்களுக்கு முன்பாகவே தேர்தல் பிரச்சாரமும் ஆரம்பமாகிவிட்டது. அதனால், தியேட்டர்களில் கூட்டம் மேலும் குறைய ஆரம்பித்துள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்றாலும் பத்து சதவீதம் கூட தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்படவில்லை.
கிரிக்கெட், தேர்தல் முடிந்த பின்புதான் மக்கள் சினிமா பக்கம் திரும்புவார்கள். அதுவரையில் தள்ளாட்டம், திண்டாட்டம்தான் இருக்கும்.