'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஹனுமான்'. இப்படம் ஓடிடியில் வெளியான ஒரே நாளிலேயே 100 மில்லியன் நிமிடப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. தற்போது 200 மில்லியன் பார்வைகளை ஐந்து தினங்களில் கடந்துள்ளது.
ஓடிடி தளத்தில் தெலுங்கு, மட்டும்தான் வெளியாகியுள்ளது. மற்ற மொழிகளில் இன்னும் வெளியாகவில்லை. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி இருந்தால் இன்னும் அதிகமான பார்வைகளை ஓடிடி தளத்தில் பெற்றிருக்கலாம்.
சில தின இடைவெளியில் ஒவ்வொரு மொழியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. விரைவில் மற்ற மொழிகளில் ஓடிடியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.