சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தன்னைப் பற்றி பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் அவதூறு வழக்கும் பாயும் என மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. வரலட்சுமி திருமணம் செய்யும் நிகோலய்க்கு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டதாகவும், அவருக்கு ஒரு பெண் பிள்ளை இருப்பதாகவும் செய்தி பரவி விமர்சனமானது. இரு தினங்களுக்கு முன் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ., உடன் இணைத்தார். இதை வைத்தும் நிறைய விமர்சனங்கள், சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்தச்சூழலில் வரலட்சுமி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛பழைய போலிச் செய்திகளை ஊடகங்கள் பரப்புவது வருத்தமளிக்கிறது. பிரபலங்களின் குறைகளை கண்டறிவதை நிறுத்துங்கள். நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும், எங்கள் வேலையை செய்கிறோம். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். உங்கள் கவனம் பெற 1000 பிரச்னைகள் உள்ளன. எங்கள் மவுனத்தை பலவீனமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவதூறு வழக்குகள் இப்போது டிரெண்டிங்கில் உள்ளன. பொய்யான குப்பையான ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.
தன்னை பற்றி பொய் செய்தி பரப்பியவர்களை சாடி இந்த பதிவை வரலட்சுமி போட்டுள்ளார். ஆனால் அது என்ன பிரச்னை என குறிப்பிடாமல் பதிவு செய்துள்ளதால் ரசிகர்கள் தலையை பியித்துக் கொண்டனர்.