தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். சில ஹீரோக்களுக்கு திருப்புமுனையான படங்களைக் கொடுத்தவர். கடந்த சில வருடங்களாக தமிழில் படங்களை இயக்காமல் இருந்தார். அவர் திருப்புமுனை தந்த ஹீரோக்களை அவரை ஒதுக்கினார்கள். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ்.
அதோடு சல்மான் கான் நடிக்க உள்ள ஹிந்திப் படத்தை இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. இன்று அந்தத் தகவலை உறுதி செய்துள்ளார் ஏஆர் முருகதாஸ்.
“சல்மான்கான், தயாரிப்பாளர் சஜித் நடியத்வாலா ஆகியோருடன் இணைவதில் மிகவும் உற்சாகம். அசாத்திய திறமைசாலிகளுடன் இணைவது ஒரு பாக்கியம். மறக்க முடியாத சினிமா அனுபவத்திற்குத் தயாராகுங்கள். எங்களது படம் 2025ம் ஆண்டு 'ஈத்'துக்கு வர உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமீர்கான் நடித்த 'கஜினி' ஹிந்திப் படம் மூலம் 100 கோடி கிளப்பை ஆரம்பித்து வைத்தவர் ஏஆர் முருகதாஸ். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'அகிரா' ஹிந்திப் படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் தோல்வியைத் தழுவியது. தற்போது ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் பக்கம் போகிறார்.