திறமை உடன் அதிர்ஷ்டமும் வேண்டும் - பார்வதி நாயர் | சிறிய படைப்பாளிகள்னா ஏளனமா? நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இயக்குனர் கேள்வி | சூர்யா 44 : பூஜா ஹெக்டே வெளியிட்ட தகவல் | டிசம்பரில் கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | அமரன் படம் ஓடிய தியேட்டர் முன்பு வெடிகுண்டு வீச்சு : நெல்லையில் பரபரப்பு | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருதுக்கு நாமினேட் ஆன ‛ஆடுஜீவிதம்' பாடல் | வீடியோ ஆல்பத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் ? விஜய் தேவரகொண்டா பதில் | மாமியார் பற்றி சிலாகிக்கும் சமீரா ரெட்டி | அல்லு அர்ஜுனுக்கு ஆறு மாத டைம் கொடுத்த பாலகிருஷ்ணா | பொன்னியின் செல்வன் அர்ஜுன் சிதம்பரம் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது |
சீரியல்களில் வில்லியாக பல வருடங்களாக கலக்கி வருகிறார் கவுதமி வேம்புநாதன். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சீரியலில் வில்லியாக நடிப்பதால் நிஜ வாழ்வில் தன் மகனின் திருமண வாழ்க்கைக்கே பிரச்னை வந்ததாக கூறியுள்ளார். கிட்டதட்ட 18 வருடங்களாக பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள கவுதமி வேம்புநாதன் வில்லி மற்றும் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். கவுதமி வில்லியாக நடிப்பதை பார்த்து பலர் இவருடன் பேசவே பயப்படுவார்களாம்.
அதிலும் அவருடைய சொந்த மகனே 'அம்மா நீ இப்படி நடிப்பதால் எனக்கு திருமணம் ஆகாதோன்னு தோனுது' என்று சொல்லியிருக்கிறார். அதுபோலவே ஒரு பெண் வீட்டில் கவுதமியின் குடும்ப புகைப்படத்தை பார்த்து ‛இந்தம்மா பெரிய வில்லியாச்சே' என பயந்து இருக்கிறார்களாம். இந்த சம்பவத்தை நேர்காணலில் மிகவும் ஜாலியாக பகிர்ந்து கொண்ட கவுதமி வேம்புநாதன் நிஜ வாழ்வில் உண்மையாகவே பழகுவதற்கு மிகவும் இனிமையானவராம்.