புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் |
தமிழ்த் திரையுலகத்தில் ஸ்டைலிஷ் இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் கவுதம் மேனன். அவர் இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் தற்போதைய ரீ-ரிலீஸ் டிரெண்டிங்கில் கூட சாதனை படைத்து வருகிறது.
குறிப்பாக கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்', சிலம்பரசன் நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' ஆகிய படங்கள் ரீரிலீஸ் வசூலிலும், ஓடும் நாட்களிலும் சாதனை படைத்துள்ளன. இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த புதிய படமான 'ஜோஷ்வா' படம் வந்த சுவடு தெரியாமல் போனது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அவரது பெயருக்காக கூட அந்த புதிய படத்தை ரசிகர்கள் பார்க்காமல், அவரது ரிலீஸ் படங்களைப் பார்க்க ஆர்வமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் வெளியான 'ஜோஷ்வா' படம் சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் அடுத்த சில நாட்களிலேயே தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாள் தயாரிப்பில் உள்ள விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.