சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
அரசியல் கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு தீவிர அரசியலில் இறங்குவதாக விஜய் அறிவித்துள்ளார். தற்போது நடித்து வரும் 'கோட்' படத்திற்குப் பிறகு தனது 69வது படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போகிறார் விஜய். அவரது 68வது படமான 'கோட்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் 69வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த உத்தேச இயக்குனர்கள் பெயர் என சமூக வலைத்தளங்களில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
தெலுங்கு இயக்குனர்கள் திரிவிக்ரம் சீனிவாஸ், கோபிசந்த் மலினேனி, தமிழ் இயக்குனர்கள் வெற்றிமாறன், அட்லி, எச் வினோத் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. இப்போது அந்தப் பட்டியலில் ஆர்ஜே பாலாஜி பெயரும் சேர்ந்துள்ளது.
“மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம்” ஆகிய படங்களை இணைந்து இயக்கிய அனுபவம் கொண்ட பாலாஜி, ஏற்கெனவே விஜய்யை சந்தித்து ஒரு கதையைச் சொன்னதாகச் சொல்லியிருந்தார். இந்நிலையில் திடீரென பாலாஜி பெயரும் விஜய் 69 இயக்குனர் ஆகலாம் என தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
யார் விஜய் 69 இயக்குனர் என இன்னும் யாருடைய பெயரெல்லாம் அடிபடப் போகிறது, எப்படி இப்படி வருகிறது என்பது புரியாத புதிர்தான்.