பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

தமிழில் 2010ம் ஆண்டு வெளிவந்த 'ஆடுகளம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதன்பின் தமிழில் 'வந்தான் வென்றான், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல் சேதுபதி,' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் பிரபலமானவர் டாப்சி. சமீபத்தில் வெளிவந்த 'டங்கி' படத்தில் ஷாரூக்கான் ஜோடியாகவும் நடித்துள்ளார். அடுத்து சில ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
டாப்சி அவருடைய பத்து வருடக் காதலரான மதியாஸ் போ என்பவரை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பாட்மின்டன் வீரர் மதியாஸ் சர்வதேச அளவில் பல பட்டங்களை வென்றவர். தற்போது இந்திய தேசிய பாட்மின்டன் அணியின் 'டபுள்ஸ் கோச்' ஆகப் பணிபுரிந்து வருகிறார்.
டாப்சி, மதியாஸ் இருவரது திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூரில் நடக்க உள்ளதாகத் தெரிகிறது. சீக்கிய, கிறிஸ்துவ முறைப்படி நடக்க உள்ள திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொள்ள உள்ளார்களாம்.