சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் வெளியிட்டார்கள். அதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்தது. என்றாலும் அந்த டீசரில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக சொல்லி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அமரனுக்கு எதிரான தங்களின் போராட்டம் இன்னும் தீவிரமாகும் என்றும், கமலின் மக்கள் நிதி மையம் கட்சியை இந்தியா கூட்டணியில் சேர்க்கக் கூடாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.