சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

''சீதா ராமம், ஹை நான்னா” தெலுங்குப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். தமிழில் சில படங்களில் அவரைக் கதாநாயகியாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மிருணாள் தற்போது மும்பையில் இரண்டு குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த இரண்டு அபார்ட்மென்ட் குடியிருப்புகளும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் குடும்பத்தினருக்கு சொந்தமானதாம். கங்கனாவின் அப்பா, சகோதரருக்குச் சொந்தமான அந்த குடியிருப்புகளை மிருணாளும், அவரது அப்பா பெயரிலும் வாங்கியிருக்கிறார்கள்.
மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள அந்த இரண்டு குடியிருப்புகளின் விலை 10 கோடி என்கிறார்கள். அதே குடியிருப்பில் தற்போது மிருணாள் வசித்து வருவதால் மிருணாள் எளிதில் பேச்சுவார்த்தை நடத்தி வாங்கியிருக்கிறார்கள். அந்த பழைய குடியிருப்பை புதுப்பிக்கும் வேலைகளில் மிருணாள் குடும்பத்தினர் இறங்கியிருக்கிறார்கள்.
மிருணாள் தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக 'பேமிலி ஸ்டார்' படத்தில் நடித்து வருகிறார்.




