'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ரசிகர்களின் வருகை மிகக் குறைவாக உள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களுக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகப் போவதில்லை.
சென்னையில் பிரபலமான தியேட்டரான உதயம் காம்ப்ளக்ஸ் தியேட்டர் மூடப்படுவது குறித்து கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களைப் பகிரும் அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. தற்போதைய சினிமாவின் நிலை தியேட்டர்களை மூடும் சூழலுக்கு தள்ளிக் கொண்டு போவதாகவே உள்ளது.
இந்நிலையில் 4 வாரங்களில் ஓடிடி வெளியீடு, சிறிய பட்ஜெட் படங்களுக்கான டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட சில விவகாரங்களைப் பேச தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று (பிப்.,20) சென்னையில் நடந்தது.
அதில், ‛தியேட்டரில் வெளியான படங்களை 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும். இல்லையெனில் தியேட்டர்களை மூடி ரிலீசை நிறுத்துவோம்' என திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், சிறிய படங்களுக்கான கட்டணங்களைக் குறைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
கேரளாவில் 6 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் படங்களை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு பிப்ரவரி 23 முதல் தியேட்டர்காரர்கள் ஸ்டிரைக் செய்ய உள்ளார்கள்.
5 தீர்மானங்கள்
இந்த பொதுக்குழுவில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், புதிதாக வெளிவரும் திரைப்படங்கள், ஓடிடியில் நான்கே வாரங்களில் வெளியாகி வருகிறது. இதனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறைந்து வருகிறது. இதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் ஒன்று கூடி ஆலோசித்து புதிய திரைப்படங்கள், எட்டு வாரம் கழித்தே, ஓடிடியில் வெளியாக வேண்டும்.
இந்தியாவில் எங்கும் இல்லாத முறையாக தமிழகத்தில் உள்ளூர் வரி 8 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை நீக்க, அரசிடம் கோரிக்கை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பழைய தியேட்டர்களை புதுப்பிக்கும் போது, நகர் ஊரமைப்பு துறைக்கு சென்று புதுப்பிக்க வேண்டி உள்ளது. ஆனால் முன்பிருந்த படி எளிய முறையில் பொதுப்பணித்துறை அனுமதி இருந்தால் மட்டுமே போதும் என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
தியேட்டர் உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே இருந்த கண்காணிப்பு பணியாளருக்கான சம்பளம் (ரெப் பேட்டா), இருதரப்பிலும் பகிர்ந்து தரப்பட்டது. இனிவரும் காலங்களில் விநியோகஸ்தர்களே அவர்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தியேட்டர்கள் மூடப்படும்
கூட்டம் முடிந்து தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், பொருளாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் அளித்த பேட்டி: தியேட்டர் பராமரிப்பு கட்டணம், குளிர் சாதன வசதி இருந்தால், டிக்கெட்டுக்கு 4 ரூபாய்; மற்றவற்றில், 2 ரூபாய் உள்ளதை, 10, 5 ரூபாயாக மாற்ற வேண்டும். தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கான பங்கீட்டு தொகை தற்போது அதிகமாக உள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் 60 சதவீதத்திற்கு மேல் கொடுக்கப் போவதில்லை.
கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும் தியேட்டரில் திரையிட அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விரைவில் தியேட்டர்கள் மூடப்படும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.