ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சென்னையைச் சேர்ந்த நடிகை சமந்தா தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்ததால் அங்கேயே செட்டிலாகிவிட்டார். தற்போது ஹிந்தியிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதிலிருந்து ஓய்வில் இருந்தார். அவருக்கு தசை அழற்சி நோய் பாதிப்பு இருந்ததால்தான் அந்த ஓய்வு. அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு தற்போது தேறி வந்து தனது நடிப்புப் பணிகளை ஆரம்பித்துவிட்டார்.
இதனிடையே, கடந்த வாரம் விரைவில் 'பாட்காஸ்ட்' சேனல் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். முற்றிலும் உடல்நலம் சார்ந்த ஒரு பாட்காஸ்ட் ஆக அது இருக்கும் என்றும் கூறியிருந்தார். நேற்று அந்த பாட்காஸ்ட் சேனலின் பெயர் 'டேக் 20' என்றும் தன்னுடன் அல்கேஷ் என்பவரும் பேசப் போகிறார் என்றும் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.
உடல்நலம் பற்றிய இந்த பாட்காஸ்டின் முதல் வீடியோ பிப்ரவரி 19ம் தேதி வெளியாக உள்ளது.
சினிமா பிரபலங்கள் பலரும் யு டியூப் சேனல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் சில விளம்பரங்கள் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் உடல்நலம் குறித்த ஒரு பாட்காஸ்ட்-ஐ சமந்தா ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.