பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சிம்ரன். அவரது நடனத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியவர் மீண்டும் நடிக்க வந்தார். அவரது நடிப்பில் ‛பேட்ட, மகான், ராக்கெட்டரி நம்பி விளைவு' போன்ற படங்கள் மீண்டும் அவரை பேச வைத்தன. தற்போது சப்தம், துருவ நட்சத்திரம், அந்தகன் போன்ற படங்களில் நடித்துள்ளார் சிம்ரன். இதில் சப்தம் அவரது ஐம்பதாவது படமாகும்.
இந்த நிலையில் சிம்ரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‛‛தக தகவென ஆடவா...'' என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது. பிதாமகன் படத்தில் இந்த பாடலை ரீ-மேக் செய்து அதில் சிம்ரனை ஆட வைத்திருந்தனர். அந்த பாடலை தான் இப்போது ரீல்ஸாக வெளியிட்டுள்ளார் சிம்ரன். அதன் உடன் ‛‛நடனம் எனது மொழி'' என குறிப்பிட்டுள்ளார் சிம்ரன்.




